நில தகராறு காரணமாக முன் விரோதம்: உறவினரின் மனைவியை தாக்கிய விவசாயிக்கு நேர்ந்த துயரம்..!

நில தகராறு காரணமாக முன் விரோதம்: உறவினரின் மனைவியை தாக்கிய விவசாயிக்கு நேர்ந்த துயரம்..!


beat-the-farmer-who-attacked-his-mother-in-the-land-dis

பெரம்பலூர் அருகே நிலத்தகராரில் தன் தாயை தாக்கிய விவசாயியை அடித்துக்கொன்ற சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் எசனை கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் இவர் ஒரு விவசாயி. இவருக்கும், இவரது  உறவினர் நாராயணசாமி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த செல்வம் மதுபோதையில்  நாராயணசாமியின் மனைவியிடம் சன்டையிட்டு அவரை  தாக்கியுள்ளார். அப்போது, அங்கிருந்த நாராயணசாமியின் மகன் ராஜாராம் ஆத்திரத்தில் உருட்டு கட்டையால் செல்வத்தை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து, ராஜாராமை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.