குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நள்ளிரவில் வீடு் வீடாக சென்று கதவை தட்டும் கரடி: குன்னூர் அருகே மக்கள் பீதி..!

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நள்ளிரவில் வீடு் வீடாக சென்று கதவை தட்டும் கரடி: குன்னூர் அருகே மக்கள் பீதி..!


bear-knocked-door-in-housing-board-area-of-coonoor

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நள்ளிரவில் வீடு் வீடாக சென்று கதவை தட்டும் கரடியால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு, மற்றும் நீர்நிலைகளை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் கரடிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந் நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில், இரவு கரடி ஒன்று அங்கிருந்த வீட்டின் கதவை தட்டியது. அடுத்த தெருவிற்கு சென்று அங்குள்ள வீட்டின் கதவையும் தட்டியுள்ளது.

கரடி வீட்டின் கதவை தட்டிய வீடியோ அந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. கரடி நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் கரடியை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.