இந்தியா

பார் மற்றும் திரையரங்குகள் திறக்க அனுமதி.! புதுச்சேரி அரசு

Summary:

bar and theatre will open in puducheri

புதுச்சேரியில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள், படப்பிடிப்புகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்தநிலையில், புதுச்சேரியில் வரும் 15 ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக்கடைகள், மற்றும் பார்கள் கலால் விதிமுறைகள்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரைகள் சாலைகளில் இரவு 9 மணிவரை மட்டுமே நடைபயிற்சி செய்ய அனுமதித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்கள் அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் மற்றும் தனியார் அலுவலங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கவும், உணவங்கள் மட்டும் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடவும் 10 மணிவரை பார்சல் விநியோகம் செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


Advertisement