திரைப்பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது... திண்டுக்கல் அருகே பரபரப்பு!!

திரைப்பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது... திண்டுக்கல் அருகே பரபரப்பு!!


Bank roberry Dindigul

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வந்துள்ளது. இன்று காலை வழக்கம் போல் வங்கி இயங்கி வந்துள்ளது. இன்று 3 ஊழியர்கள் மட்டுமே வேலை பார்த்து வந்த நிலையில் திடீரென வங்கி உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் கட்டிங் பிளேடு மற்றும் கத்தியுடன் வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடியை அங்கிருந்தவர்களின் மேல் தூவி கட்டி போட்டுள்ளார். அதில் ஒரு ஊழியர் மட்டும் வெளியே சென்று கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அங்கிருந்து மக்கள் ஓடி வந்து காவலாளியின் உதவியுடன் கொள்ளையனை கட்டி போட்டுள்ளனர்.

Bank roberry

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் கொள்ளையனை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் துணிவு போன்ற பல படங்களில் பார்த்து வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக அந்த இளைஞர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.