கடற்கரையில் இரவில் கைக்குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்! கண்விழித்தபோது கண்ட அதிர்ச்சி காட்சி!baby kidnapped from  platform sleeping girl

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை  சேர்ந்தவர் சினேகா. இவருக்கு பாட்ஷா என்ற நபருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற எட்டு மாத கைக்குழந்தை உள்ளது. இதனை தொடர்ந்து இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.மேலும் இவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஊர்ஊராக சென்று ஊசி, பாசி,  பலூன் போன்றவற்றை விற்று வருகின்றனர்.

இந்நிலையில் தனது 8 மாத கைக்குழந்தையுடன் சினேகா சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் பெசன்ட் நகர் கடற்கரையில் ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தனது கைக்குழந்தையுடன் தூங்கியுள்ளார். மேலும் அதிகாலை 3 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது அவரது பக்கத்தில் குழந்தை இல்லை. மேலும் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறிக்கொண்டே கடற்கரை முழுவதும் குழந்தையை தேடி பார்த்துள்ளார்.

Besant nagar

ஆனாலும் குழந்தை கிடைக்காத நிலையில் அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வது தெரியவந்தது. பின்னர் போலீசார் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.