"இதனால தான் விலையை ஏத்துனோம்.. புரிஞ்சிக்கோங்க.!" ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.!

"இதனால தான் விலையை ஏத்துனோம்.. புரிஞ்சிக்கோங்க.!" ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.!



avin explained why we hike ghee and butter Price

பால் உள்ளிட்ட ஆவின் உற்பத்தி பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பலரும் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், தற்போது எப்போதும் இல்லாத வகையில் ஆவினின் வெண்ணெய் மற்றும் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

ஒரு கிலோ நெய் ரூ.70 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.700க்கும் அரை கிலோ வெண்ணெய் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.275 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 

avin

இந்த நிலையில் ஆவின் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், "4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த தான் வெண்ணை மற்றும் நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஏற்றி இருக்கிறோம்.

சந்தையில் விற்கப்படும் மற்ற நெய் மற்றும் வெண்ணை ஆகியவற்றின் விலையை விட ஆவின் பொருட்களின் விலை குறைவாகத்தான் இருக்கிறது. பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த தான் இந்த நடவடிக்கை இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

avin

சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை ஏற்றப்பட்டாலும் கூட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படம் பாலின் விலை லிட்டருக்கு 1,2 ரூபாய்கள் எனும் வீதத்தில் தான் உயர்த்தப்படுகிறது. இது பால் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை என்பது வேதனையான விஷயம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்