சிக்கிய சிசிடிவி காட்சி... கரண்ட் கட் ஆனதுக்கு காரணம் இதுதான்! தவெக ஆட்சி இல்ல.... அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அந்த ஒரு வீடியோ...!!!
சென்னை ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட மர்மமான மின்தடைக்கு காரணமான ஃபியூஸ் கேரியர் திருட்டு வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் மின்சாதனங்களை திருடிச் சென்றதாகக் கூறப்படும் இருவரை இன்று காலை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மாயமான ஃபியூஸ் கேரியர்கள்
கடந்த சில நாட்களாக ஆவடி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தபோது, மின் விநியோக அமைப்பில் பொருத்தப்பட்டிருந்த ஃபியூஸ் கேரியர்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் பல பகுதிகளில் மக்கள் சிரமத்தை சந்தித்தனர்.
அமைச்சர் பகிர்ந்த சிசிடிவி வீடியோ
இந்த விவகாரம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, இரவு நேரத்தில் பைக்கில் வந்த இருவர் மிகச் சாதுர்யமாக ஃபியூஸ் கேரியர்களை அகற்றிச் செல்லும் CCTV காட்சிகளை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ பரவலாக பேசப்பட்டதுடன், விசாரணைக்கும் முக்கிய ஆதாரமாக அமைந்தது.
இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!
தனிப்படை நடவடிக்கையில் சிக்கிய இருவர்
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஆவடி தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். தகவலின்படி, சிசிடிவி பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகநபர்களை அடையாளம் கண்ட போலீசார் இன்று காலை இருவரையும் கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi.
Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled. pic.twitter.com/AkQOA5mc6K
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) June 9, 2026