எனக்கு அமைச்சரை தெரியும்.! அசிங்க அசிங்கமாக பெண் போலீசை திட்டிய ஆட்டோ டிரைவர்.! ஷாக் வீடியோ.!

எனக்கு அமைச்சரை தெரியும்.! அசிங்க அசிங்கமாக பெண் போலீசை திட்டிய ஆட்டோ டிரைவர்.! ஷாக் வீடியோ.!



auto-driver-problem-with-women-police

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (நேற்று) காலை 6 மணி வரை அமலில் இருந்தது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, ஜூன் 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்களுக்கும் முக்கிய பங்கு என்றே கூறலாம். தடுப்பு பணியில் ஈடுபட்ட பல காவலர்களும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தங்கள் உயிரை பணயம் வைத்து சுட்டெரிக்கும் வெயில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தநிலையில், காவலர்களின் பணியை செய்யவிடாமல் சிலர் செய்யும் செயல் காவலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் போக்குவரத்து காவலர்களை ஒருமையில் கடுமையாக பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நேற்று காலை சென்னை முத்தியால்பேட்டை போலீசார், பெண் காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா தலைமையில் பாரதி மகளிர் கலைக்கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, இ-பதிவு உள்ளதா? என போலீசார் விசாரித்துள்ளனர்.

அப்போது ஆட்டோ டிரைவர் அஸ்கர் அலி என்பவர் ஆட்டோவில் உடல் ஊனமுற்றோரை அழைத்து வந்ததாகவும், பின்னர் சமூக சேவை செய்வதாகவும் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இ-பதிவு இல்லாததால் ஆட்டோவை பறிமுதல் செய்து சாவியை காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா வைத்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்கர் அலி, பெண் உதவி ஆய்வாளரிடம் ஆவேசமாக கையை நீட்டி ஒருமையில் பேசியுள்ளார்.

ஆனாலும் பொறுமையுடன் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் நான் உங்களை மரியாதையுடன்தான் பேசுகிறேன். நீங்களும் மரியாதையாக பேசுங்கள் என கூறியுள்ளார். ஆனாலும், ஆட்டோ டிரைவர் அஸ்கர் அலி, எனக்கு அமைச்சரை தெரியும் என கூறி பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியதுடன், நீ நல்லாவே இருக்கமாட்ட.. என ஆவேசமாக சாபமும் விட்டார். இந்தநிலையில், ஆட்டோ டிரைவர் அஸ்கர் அலி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.