பட்டபகலில் ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தி கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.!

பட்டபகலில் ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தி கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.!


ATM robbery at gunpoint

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்  குகட்பல்லி பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அங்கு, வழக்கம்போல் பாதுகாவலர் உதவியுடன் வங்கி ஊழியர் பணம் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வங்கி ஊழியர் மற்றும் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்த பணத்தை மொத்தமாக அள்ளிக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர். 

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த  வங்கி ஊழியர் மற்றும் பாதுகாவலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பலத்த காயமடைந்த பாதுகாவலர் வயிற்றில் குண்டு பாய்ந்ததால் அவருக்கு அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டுமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும், வங்கி ஊழியர் நிலைமை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ATMதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபகுதியில் பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.