பைக் மீது ரோடு போட்ட காலம் போயே போச்சு: கரண்ட் கம்பத்தை சுற்றி வாய்க்கால் கட்டும் காலம் வந்தாச்சு..!

பைக் மீது ரோடு போட்ட காலம் போயே போச்சு: கரண்ட் கம்பத்தை சுற்றி வாய்க்கால் கட்டும் காலம் வந்தாச்சு..!


As there was an electric pole across the canal construction site, the canal was constructed by placing the electric pole in the middle without removing it.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகேயுள்ள அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட  7 வது வார்டில் சிமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, சாலையின் ஓரத்தில் கால்வாய் அமைக்கும் இடத்திற்கு குறுக்கே மின்கம்பம் இருந்த நிலையில், அதனை அப்புறப்படுத்தாமல் மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்வாய்க்குள் மின்கம்பம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக கடந்த சில மாதங்களில் மோட்டார் சைக்கிள், ஜீப் மற்றும் அடிபம்பு போன்றவற்றை அகற்றாமல் அவற்றின் மீது சாலை அமைத்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது மின்கம்பத்தை அகற்றாமல் அதனை சுற்றி கால்வாய் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில், பல வருடங்களாக கால்வாய் அமைக்க வலியுறுத்தியதாகவும், தற்போது தரமற்ற முறையில் கால்வாய் அமைக்கப்பட்டு வருவதாகவும் வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.