போக்சோ வழக்குகளில் தீவிர விசாரணைக்கு பிறகு கைது... அவசரம் கூடாது; டி ஜி பி சைலேந்திரபாபு..!!

போக்சோ வழக்குகளில் தீவிர விசாரணைக்கு பிறகு கைது... அவசரம் கூடாது; டி ஜி பி சைலேந்திரபாபு..!!



Arrest after intense investigation in POCSO cases...no rush; DGP Shailendrababu..

முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.

தமிழக காவல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போக்சோ வழக்குகள் குறித்து நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சென்னை உயர்நீதிமன்றம், சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் (போக்சோ) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த குழுவினர் போக்சோ வழக்குகளை கையாளும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர். 

அதில், காதல் மற்றும் திருமண உறவு, போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள் மற்றும் எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம். மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர் கைது செய்யப்படாத வழக்கை, கோப்பில் பதிவு செய்தால், அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட காவல் சூப்பிரண்டு அதிகாரியிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்.  

மேலும் அதிகாரிகள் முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்ய வேண்டும். கோப்பினை தீவிர ஆய்வு செய்து, மேல் நடவடிக்கையை கைவிடும் வழக்குகளில் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவுரைகளை காவல் துறை கமிஷனர்கள், மாவட்ட காவல் துறை சூப்பிரண்டுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.