தமிழகம்

சூப்பர் ஸ்டாலின் சார்..! ஒரு தாயின் உணர்வுகளை புரிந்து செயல்பட்ட முதலமைச்சருக்கு அற்புதம்மாள் நன்றி.!

Summary:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தற

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தற்போது புழல் சிறயைில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.   

இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல்நிலை உணர்ந்து,  நடவடிக்கை மேற்கொண்டு உடனே விடுப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி" என தெரிவித்துள்ளார்.


Advertisement