தமிழகம்

என்னுயிர் இருக்கும்போதே அது நடக்கட்டும்! கலங்கிய பேரறிவாளன் தாய் அற்புதம்மாள்!

Summary:

arputhammal talk about 7 were released


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து, அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதியன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அரசு சார்பில் அன்றைய தினமே 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இன்று வரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பதிவிட்ட ட்விட்டில், அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு. நிரபராதி,விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே! 29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்! என பதிவிட்டுள்ளார்.


Advertisement