திக்.. திக்.. பனிமூட்டத்தில் மறைந்ததும் விபத்து சத்தம்.. ஹெலிகாப்டரின் இறுதி நொடி வீடியோ வைரல்.!

திக்.. திக்.. பனிமூட்டத்தில் மறைந்ததும் விபத்து சத்தம்.. ஹெலிகாப்டரின் இறுதி நொடி வீடியோ வைரல்.!



army-helicaptor-coonoor-crash-last-seconds-video-viral

நஞ்சப்பசத்திரம் அருகே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான இராணுவ ஹெலிகாப்டரின் இறுதி நொடி வீடியோ வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, குன்னூர் நோக்கி பயணம் செய்த இராணுவ ஹெலிகாப்ட்டர், அங்குள்ள காட்டேரி நஞ்சப்பசத்திரம் கிராமம் அருகே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 1 விமானி உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து இராணுவ, விமானப்படை அளவிலான உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், குன்னூர் மலைரயில் பாதையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று நடந்து சென்ற பயணி ஒருவர், வானத்தின் நடுவே ஹெலிகாப்ட்டர் பறப்பதை பார்த்து, இயற்கை அழகை கண்டு ரசித்துக்கொண்டு இருந்துள்ளார்.

Nilgiris

அப்பகுதியில் ஹெலிகாப்டர் எப்போதாவது தான் பறக்கும் என்ற காரணத்தால், அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்ட நிலையில், ஹெலிகாப்டர் பனிமூட்டத்திற்குள் சென்று விபத்திற்குள்ளானது போல சத்தம் கேட்டுள்ளது. 

இந்த சத்தத்தை கேட்ட சுற்றுலா பயணிகள் விமானம் விழுந்துவிட்டதா? என்ற கேள்வியை முன்வைத்தவாறு வீடியோ நிறைவடைகிறது. இதுதான் ஹெலிகாப்டரில் இறுதி காட்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில், வீடியோ வைரலாகி வருகிறது.