தங்கையின் திருமணத்தை முடித்த அடுத்த நொடியே வழக்கறிஞர் அண்ணன் 6 பேர் கும்பலால் துள்ளத்துடிக்க கொலை..! 

தங்கையின் திருமணத்தை முடித்த அடுத்த நொடியே வழக்கறிஞர் அண்ணன் 6 பேர் கும்பலால் துள்ளத்துடிக்க கொலை..! 


Ariyarlur Jayankondam Lawyer Killed by Gang

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவிலில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரின் மகன் சாமிநாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இவரின் தங்கை தையல் நாயகி. 

சாமிநாதனின் தங்கையான தையல் நாயகிக்கு இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. அப்போது, சாமிநாதன் உணவகத்திற்கு சென்று தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

அந்த சமயத்தில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல், சாமிநாதனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் சாமிநாதன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.