தேர்தல் பிரச்சனையில் வழக்கறிஞர் வெட்டிப்படுகொலை... வீடுபுகுந்து பரபரப்பு சம்பவம்.!

தேர்தல் பிரச்சனையில் வழக்கறிஞர் வெட்டிப்படுகொலை... வீடுபுகுந்து பரபரப்பு சம்பவம்.!


Ariyalur Jayankondam Udayarpalayam Lawyer Murdered by 6 Man Gang

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் அறிவழகன் (வயது 34). இவர் வழக்கறிஞர் ஆவார். அறிவழகன் உடையார்பாளையம் பேரூராட்சி 15 ஆவது வார்டில் சுயேட்சையாக களமிறங்கிய இலக்கிய பிரபு என்பவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த விஷயத்திற்கு அவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்த நிலையில், அறிவழகனிற்கும் - அவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்த அறிவழகனை 6 பேர் கொண்ட கும்பல் குத்தி கொலை செய்தது. 

Ariyalur

அறிவழகனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வந்த உறவினர்கள், அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது, மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிடுவோம் என மிரட்டி தப்பி சென்றுள்ளது. அறிவழகன் இரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர், அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, செந்தில் (வயது 37) என்பவரை கைது செய்துள்ளனர். செந்திலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.