ஜோதிடத்தை நம்பி பிறந்து 38 நாட்கள் ஆன பேரனை கொன்ற தாத்தா; அரியலூரில் நடுங்கவைக்கும் சம்பவம்.!ariyalur-grand-fa-killed-new-born-baby

 

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரின் மனைவி சங்கீதா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் கர்ப்பமாக இருந்த சங்கீதாவுக்கு, கடந்த 38 நாட்களுக்கு முன்பு பிரசவம் நடந்துள்ளது. 

தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், உற்றார்-உறவினர்கள் பலரும் நேரில் வந்து தம்பதிகளை வாழ்த்திவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், ஜூன் 14 ம் தேதி பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. 

இதையும் படிங்க: கடைசியா ஒரேயொரு தடவை... கெஞ்சிய கள்ளக்காதலன்.. மறுப்பு தெரிவித்த பெண் பேருந்து நிலையத்தில் படுகொலை.!

காவல்துறை விசாரணை

இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், விசாரணையில், குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, குடுமப்த்தினரிடம் முதற்கட்டமாக தீவிர விசாரணை நடந்தது. 

இந்நிலையில், குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்த தாத்தா வீரமுத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட வீரமுத்து, குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்துள்ளார். 

ஜோதிடத்தை நம்பி அதிர்ச்சி செயல்

அதில் குழந்தையினால் கடன் சுமை ஏற்படும் என கூறப்பட்ட காரணத்தால், அதனை நம்பி கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பேரனை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: கள்ளக்காதல் காமத்தால் பறிபோன உயிர்.. விடுதி அறையில் விண்ணுலகம் அனுப்பிய காதலி.!