BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!
மது போதையில் தகராறு.. நண்பனை அடித்தே கொன்ற சக நண்பர்கள்.. திருச்சி அருகே பயங்கரம்..!
திருச்சி உறையூரில் வசித்து வந்தவர்கள் குணசேகர் - ராணி தம்பதியினர். இவர்களுக்கு விஜயகுமார், தர்மா என்ற 2 மகன்களும், ரேவதி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் மது போதைக்கு அடிமையான குணசேகர் தினமும் குடித்துவிட்டு சாலை ஓரங்களில் படுத்து உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது நண்பர்களுக்கும் குணசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் குணசேகரை கடுமையாக தாக்கி அங்கே விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள் குணசேகரன் இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசங விசாரணை நடத்தி வருகின்றனர்.