அரசியல் தமிழகம்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்!

Summary:

announcement about converyt vedha illam as memorial

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர், அந்த இல்லத்தை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

A Litany Of Woes: Why Jayalalitha's Posh Chennai Bungalow Has ...

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா  இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.  அவசர சட்டத்தின் மூலம், புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்து பணிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வேதா நிலையம் இல்லத்தில் உள்ள மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் உள்ளிட்டவை கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, வேதா இல்லத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது. 


Advertisement