"திமுக அரசின் உண்மை முகம் இதோ" - அம்பத்தூரை குறிப்பிட்டு அண்ணாமலை காட்டம்.!annamalai-says-dmk-bribery-govt-wont-help-ambattur-comp

 

தலைநகர் சென்னையை புரட்டியெடுத்த மிக்ஜாங் புயலின் கோரத்தாண்டவம் காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக சென்னையின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. 

களத்தில் புயல் கரையை கடந்ததில் இருந்து தமிழ்நாடு பாஜகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தது. தினமும் அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். அம்பத்தூரில் புகுந்த வெள்ளம், அம்பத்தூர் தொழிற்பேட்டையை பதம்பார்த்து கோடிகள் முதலீட்டில் வைக்கப்பட்டு இருந்த இயந்திரங்களை பாதித்தது.

இந்நிலையில், இன்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு செய்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பதிவில், "மிக்ஜம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தமிழ்நாடு பாஜக சார்பாக தொழில் முனைவோர்களை இன்று சந்தித்தோம். 

annamalai

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிவரும் சென்னையின் தொழிற்துறை மையமாக விளங்கும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரியாக இரண்டு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படும் நிலையில் இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது.

கடன் வாங்கி தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்  தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறியதோடு, தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் அவர்களிடம், கோரிக்கை மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.