#Breaking: மீண்டும் மீண்டுமா? திமுக அரசின் மீது பாய்ச்சலில் அண்ணாமலை.! கடும் கண்டனம்.!



ANnamalai Condemn on Avinashi Couple Killed on 13 March 2025 

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்த பழனிசாமி- பர்வதம் தம்பதி, மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தனர். இதுதொடர்பான வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிகளின் பிள்ளைகள் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், வீட்டில் தனியே வசித்து வந்த தம்பதி கொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே பல்லடம் அருகே முதிய தம்பதி, மகன் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் 100 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. மீண்டும் இக்கொலை சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 

அச்சத்தில் மக்கள்

இந்நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. 

இதையும் படிங்க: #Breaking: டெல்லி, சத்திஸ்கர் போல தமிழ்நாட்டில் மாபெரும் மதுபான ஊழல்? அண்ணாமலை சூசகம்.!

அரங்கேறும் குற்றச்செயல்கள்

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. திமுக அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள். சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்." என தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: பிரவசத்துக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் பெண் பலி? அண்ணாமலை குற்றச்சாட்டு.. திமுக அரசுக்கு கண்டனம்.!