தவறான வீடியோ பரவல்! சைபர் க்ரைமில் புகார் அளித்த ஜெமினி பட நடிகை கிரண் ரத்தோட்!
#Breaking: டெல்லி, சத்திஸ்கர் போல தமிழ்நாட்டில் மாபெரும் மதுபான ஊழல்? அண்ணாமலை சூசகம்.!

இந்திய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக, மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது மதுபான ஊழல் விவகாரம். இதனால் டெல்லியில் ஆட்சி மாற்றம் வரை அரசியலில் அதிரடி திருப்பம் நிலவி இருந்தது. அதாவது, டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்த விவகாரத்தில் அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தது
இதனிடையே, 2025 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் உட்பட, ஆம் ஆத்மீ அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், மக்கள் அங்கு பாஜகவுக்கு வாய்பளித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரவசத்துக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் பெண் பலி? அண்ணாமலை குற்றச்சாட்டு.. திமுக அரசுக்கு கண்டனம்.!
அமலாக்கத்துறை சோதனை
அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் அவரது மகன் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை மதுபான ஊழல் தொடர்பாக சோதனை நடத்துகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், 3 நாட்கள் விடிய-விடிய சோதனை நடந்தது. இதனால் அடுத்தகட்டமாக அரசியலில் என்ன பூதம் கிளம்பப்போகிறது? என தெரியாமல் வட்டாரங்கள் விழிபிதுங்கி இருக்கின்றன.
மதுபான ஊழல்
ஏற்கனவே அரசு மதுபானக்கடையில் பாட்டிலுக்கு ரூ.20 வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. மதுபான துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்து இருக்கிறார். இந்நிலையில், டெல்லி, சத்தீஸ்கர் போல தமிழ்நாட்டிலும் மதுபான ஊழல் விஷயத்தில் முக்கிய புள்ளிகள் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அண்ணாமலை தனது வலைப்பக்கத்தில் சிறிய தகவலாக பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: பயம் வந்திருச்சு.. திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - அண்ணாமலை பரபரப்பு கண்டனம்.!