ஸ்டாலின் அவர்களே ...இந்தியை எதிர்ப்போம் என்று சொல்றீங்களே..! ஆனால் இப்டி பண்ணிட்டீங்களே.! அன்புமணி ராமதாஸ் தாக்கு.!

ஸ்டாலின் அவர்களே ...இந்தியை எதிர்ப்போம் என்று சொல்றீங்களே..! ஆனால் இப்டி பண்ணிட்டீங்களே.! அன்புமணி ராமதாஸ் தாக்கு.!


anbumanai ramathas talk about mk stalin

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்தநிலையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சிவகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டேரிப்பட்டு பகுதியில் மக்கள் முன்பு பேசிய அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரின் தாயாக இருந்தாலும் சரி ஒரு விவசாயி தாயாக இருந்தாலும் சரி இன்னொருத்தர் அம்மாவை பற்றி யாராவது தவறாக பேசலாமா? அவ்வளவு கொச்சையாக பேசிய ஆ.ராசாவை இன்று வரைக்கும் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.

Anbumaniஇரண்டு வருடத்திற்கு முன்பு அவங்க கட்சியில ராதாரவி அவர்கள் நயன்தாராவைப் பற்றி தவறாக பேசினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் ராதாரவியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டார். நயன்தாரா பற்றி பேசும் போது கோபம் வந்த ஸ்டாலின் அவர்களே ஒரு தாயைப் பற்றி பேசும்போது ஆ.ராசா மீது ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டாலின் அவர்களே இந்தியை எதிர்ப்போம் என்கிறீர்கள், ஆனால் பல கொடிகள் கொடுத்து பீகாரிலிருந்து பிரசாந்த் கிஷோர் என்ற இந்திக்காரரை கூட்டிட்டு வந்து என்னை எப்படியாவது முதலமைச்சராக ஆக்குங்கள் என்கிறீர்கள். அரசியல் என்பது ஒரு சேவை. நானும் டாக்டர் ராமதாசும் எல்லாம் செய்கிறது சேவை. மு.க. ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என பேசினார் அன்புமணி ராமதாஸ்.