விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி அறக்கட்டளை நிர்வாகி கைது; மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வன்கொடுமை செய்த கொடூரம் ...!!

விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி அறக்கட்டளை நிர்வாகி கைது; மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வன்கொடுமை செய்த கொடூரம் ...!!


Anbu Jyoti Trust Executive in Villupuram Arrested; The brutality of brutalizing the mentally ill...

விழுப்புரம் அருகேயுள்ள அன்பு ஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதில் அறக்கட்டளை நிர்வாகியின் மனைவி மரியா ஜீபினை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூர் கிராமத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில், சேர்க்கப்படுபவர்கள் மர்மமான முறையில் இறந்து விடுவதாக புகார்கள் வந்தன.

திருப்பூரை சேர்ந்த முதியவர் ஜபருல்லாவை 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அவரது மருமகன் சலீம்கான் அமெரிக்காவில் இருந்து கொண்டு, தனது நண்பர் மூலம் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்து விட்டார்.

அதன் பின்னர் 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சலீம்கான், அவரது மாமாவை பார்க்க குண்டலப்புலியூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றார். அப்போது அங்கு ஜபருல்லா இல்லாததால், அறக்கட்டளை நிர்வாகியிடம் இது குறித்து கேட்கும் போது அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. 

எனவே சலீம்கான் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், கெடார் காவல் நிலையத்திற்கு உரிய விசாரணை செய்ய உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவின் படி காவல்துறையினர் கடந்த 10 தேதி அன்பு ஜோதி அறக்கட்டளைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 15-க்கும் மேற்பட்டோர், அறக்கட்டையிலிருந்து காணாமல் போயிருந்தது மற்றும் ஆசிரமத்தில் இருந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

15 வருடங்களுக்கு மேலாக ஆசிரமம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது தெரிய வந்ததால், மாட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆசிரமத்தில் இருந்த 86 பேரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆசிரமத்தின் உரிமையாளர் ஜீபின், நிர்வாகத்தை சேர்ந்த பியூ மோகன், ஐயப்பன், முத்துமாரி, கோபிநாத் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜீபின் மற்றும் அவரது மனைவி மரியா இரண்டு பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஜீபினின் மனைவி மரியாவை சிகிச்சை முடிந்து கெடார் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

அறக்கட்டளை நிர்வாகியான ஜீபனுக்கு உறுதுணையாக செயல்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடித்து துன்புறுத்தியது. ஆசிரமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்தது, ஆகிய 12 பிரிவுகளின் கெடார் காவல்துறையினர் மரியா ஜீபினை இன்று கைது செய்தனர்.

அன்பு ஜோதி அறக்கட்டளையின் மற்றொரு கிளை கோட்டகுப்பத்தில் உள்ள நிலையில் அங்கிருந்து மேலும் 25 பேரை காவல்துறையினர் என்று மீட்டனர்.