குடியால் வந்த வினை... மோதலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!

குடியால் வந்த வினை... மோதலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!


an-youth-commits-suicide-after-fight-with-friends-durin

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நண்பர்களுக்கிடையே மது போதையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஓடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் தனது நண்பர்களான செல்வம் மற்றும்  பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார். அப்போது போதை தலைக்கேறியதால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

tamilnaduஇதனால் மனம் உடைந்த செல்வம் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

tamilnaduபிரேத பரிசோதனை முடிந்து செல்வத்தின் உடல் அவரது உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை வாங்காமல் செல்வத்தின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.