அச்சச்சோ... காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பெண் உதவி ஆய்வாளர்... அதிர்ச்சி காரணம்.!

அச்சச்சோ... காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பெண் உதவி ஆய்வாளர்... அதிர்ச்சி காரணம்.!



an-young-woman-si-try-to-commit-suicide-in-the-police-s

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுகன்யா. நேற்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த அவர்  தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட  சக காவலர்கள் புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Cuddalore

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . தற்போது அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் வெளியாகியிருக்கிறது. காவல்துறையில் அடிக்கடி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது நிகழும். அதுபோன்று கடலூர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுகன்யாவை  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு மாற்றி இருக்கின்றனர்.

இது தொடர்பாக அவர் உயர் அதிகாரிகளிடம்  காரணம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கிறார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் காவல்துறை உதவி ஆய்வாளர் சுகன்யா.