உத்தமவில்லன் பட பாணியில் ஒரு சம்பவம்! ராட்சத குழாயில் மிதந்த சடலம், உயிருடன் எழுந்ததால் அதிர்ச்சி! வெளிவந்த உண்மை!!an-incident-in-uttamavillan-film-style-dead-body-floati

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே கல்லாறு பகுதி ஒன்று உள்ளது. இதில் காலை நேரத்தில் குளிக்க அந்த பக்கம் வந்தவர்கள் தண்ணீரில் கிடந்த பெரிய குழாய் ஒன்றில் மனித உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர் மிதந்து கிடக்கும் உடலை மீட்டெடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

அப்போது தண்ணீருக்குள் இறங்கியவுடன் அந்த உடல் அசைவது போன்று தெரிந்துள்ளது. தண்ணீரில் இறங்கியதால் உடல் அசைவதுபோல் தெரிகிறது என்று நினைத்த கொண்டு அருகே சென்றுள்ளனர்.

அப்போது திடீரென்று அந்த உடல் குழாய்க்குள் இருந்து வெளியே வந்தது. இதனை எதிர்பாராத காவல்துறையினர் சடலம் என்று நினைத்தால் உயிருடன் வந்துள்ளார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு இது குறித்து விசாரிததில் அந்த முதியவர் மது அருந்திவிட்டு போதையில் தண்ணீருக்குள் கிடந்துள்ளார். மேலும் இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அரக்கோணத்தில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

பின்னர் போலீசார் அவரை அழைத்துக்கொண்டு சென்று முதலுதவி அளித்து அனுப்பி வைத்துள்ளனர். உத்தம வில்லன் பட பாணியில் கமலஹாசன் ஆற்றில் மிதந்து வருவது போல் வந்து உயிர்த்தெழுந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.