BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
காலம் போன காலத்தில் நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கெடுத்த முதியவர்... கைது செய்த போலீசார்...!!
முதியவர் ஒருவர் நடுரோட்டில் பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி அந்த பெண் அண்ணா நகரில் புதுமண்டபம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் ஆபாச செய்கை காண்பித்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
முதியவர் போதையில் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த பெண், அவரை தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதியவர், கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலை தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். வலியில் அந்த பெண் அலறி துடித்துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும் அந்த முதியவர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். அங்கிருந்தவர்கள் பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அண்ணா நகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் 62 வயது கரிகாலன் என்பது தெரிய வந்துள்ளது. அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.