தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 2 பேருக்கு அரிவாளால் வெட்டு! அணைத்து கடைகளும் மூடப்பட்டு பதட்டமான சூழ்நிலை!

Summary:

all shop are closed in alangudi


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 2 பேர் தாக்கப்பட்டதால், வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பிளக்ஸ் பிரிண்டிங் கடை நடத்திவருபவர் முருகானந்தம். நேற்று மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து முருகானந்தம் என்பவரை அரிவாளால் வெட்டினர். அவரை தடுக்கவந்த அவரது தந்தை கணேசன் என்பவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி க்கான பட முடிவு

இதனால், இரண்டு வெவ்வேறு தரப்பினர்க்கிடையே மோதல் வெடித்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோதலை அடுத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்துக்கடைகளும் மூடப்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


Advertisement