சென்னை மெரினா கடற்கரையில் கடத்தல் சாராயம் விற்பனை;காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

சென்னை மெரினா கடற்கரையில் கடத்தல் சாராயம் விற்பனை;காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!



alcohol-sales-in-chennai-merina-beach-3-women-arrested

சென்னை மெரினா கடற்கரையில் சாரயம் விற்ற வடமாநில பெண்கள் 3 பேரை மயிலாப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாராயம் கடத்தி வந்து சென்னை மெரினா கடற்கரை மணலில் புதைத்து வைத்து சிலர் விற்பனை செய்வதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திரிஷா மிட்டல் தலைமையிலான தனி படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படையினர், மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் போல் இரவு நேரத்தில் ரோந்து வந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் மெரினா கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்த கேன் ஒன்றை மூன்று வடமாநில பெண்கள் வெளியே எடுத்தனர். இதை கவனித்த தனிப் படையினர் விரைந்து சென்று மணற்பரப்பிலிருந்து இருந்து எடுக்கப்பட்ட கேனை கைப்பற்றி திறந்து பார்த்தபோது, அதில் 35 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்த்து.

மேலும் இவர்கள் பழைய கூல்டிரிங்ஸ் பாட்டில்களை வாங்கி வந்து விலைக்கு வாங்கி வந்து அதில் சாராயத்தை நிரப்பி ஒரு பாட்டில் ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் யாருக்கும் சந்தேகம் வராதபடி பழைய கூல்டிரிங்ஸ் பாட்டிலில்  சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் இந்த பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் அவர்களிடமிருந்து 35 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், 40 பேர் மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.