நள்ளிரவில் நடுரோட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த வேலையை பாருங்க! இணையத்தில் வைரலாகும் வீடியோ...



aiswarya-rajesh-social-service-video

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி, பிற மொழிகளில் தனித்துவமான கதைகள் மற்றும் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் இவர் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.

சமூக சேவையில் முன்னிலை

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். இதில், அவர் Help On Hunger குழுவுடன் இணைந்து, சாலையோரங்களில் போர்வை இல்லாமல் உறங்கும் நபர்களுக்கு இரவு நேரத்தில் போரை வழங்கியுள்ளார்.

மக்கள் பாராட்டு

இந்த உதவி நடவடிக்கைக்கு மக்கள் பெரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் சென்றும், அனைவருக்கும் உதவி செய்து சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பது, அவரின் மாபெரும் மனதையும், சமூக சேவை பற்றிய அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க: மகளின் பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டாமாக நடத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா! வைரல் வீடியோ....

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமூகவளங்களில் தனது சேவை முயற்சிகளை தொடர்ந்து பகிர்ந்து, ரசிகர்களுக்கும் சமூகப்பணிக்கு ஒரு வலுவான செய்தியையும் கொடுத்து வருகிறார். இதனால் அவர், திரையுலகத்தின் மட்டுமல்லாது, சமூகத்திலும் முன்னணி பங்கு வகிக்கிறார்.

 

இதையும் படிங்க: மனசே வலிக்குது.... கதறி அழுது வீடியோ வெளியிட்ட நடிகை சதா! இதெல்லாம் எதற்காகன்னு பாருங்க!