தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் ஒரு சோகம்! மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது குழந்தை!

Summary:

again one child died in water.

சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் என்ற சிறுவனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தும் மீட்புப்பணி தோல்வியில் முடிந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சோகம் ஆராதழும்பாய் இருக்கும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி ,நேத்ரா என்ற தம்பதியினருக்கு 3 வயதில் ருத்ரன் என்ற ஆண்குழந்தை இருந்துள்ளான். ருத்ரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அவனது தாத்தா அவரது வீட்டிற்கு முன்பு மழை நீர் சேகரிப்புக்காக 6 அடி தொட்டியை அமைத்திருந்துள்ளார்.

அந்த தொட்டி மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருவதால் அந்த தொட்டி முழுவதுமாக தண்ணீர் நிரம்பியிருந்தது. இந்தநிலையில் இன்று காலை மழை சற்று ஓய்ந்த நேரத்தில் சிறுவன் ருத்ரன் வீட்டின் வெளியே விளையாடியுள்ளான். அப்போது  எதிர்பாராதவிதமாக 
மழைநீர் தொட்டிக்குள் ருத்ரன் தவறி விழுந்துள்ளான். 

இதனை பார்த்த அப்பகுதியினர் ருத்ரனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவனை பரிசோதித்த சிகிச்சையாளர்கள் ருத்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  மழைநீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement