தமிழகம்

மீண்டும் ஒரு புயல்! தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை!

Summary:

again cyclone, heavy rain in tamilnadu

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது, இந்தநிலையில் கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது அரபிக் கடலில் உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மஹா புயல் உருவாகி இருப்பதால் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த புயலால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுகோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, கோவை, திண்டுக்கல்,போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 


 


Advertisement