தமிழகம்

புதுக்கோட்டையில் சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்த ரகுபதி என்ற இளைஞன் புதுக்கோட்டையில் கேபிள் டி.வி. நடத்தும் ஒருவரிடம் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் டி.வி.யில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அங்கிருந்து ஓடிவிட்டார். 

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் ரகுபதி. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அலறல் சத்தம் போட்டுள்ளான். சிறுவனின் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதைப்பார்த்த ரகுபதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் ரகுபதியை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் ரகுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுவனை பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Advertisement