அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!


admk MLA Wife and Daughter also affected by corona

தமிழகத்தில் கொரோனா பரவுதலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 - ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 - ஆகவும் உயர்ந்துள்ளது. 

தற்போது கொரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ள நிலையில் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

corona

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.