திடீர் மாற்றம்.. சசிகலா தலைமையேற்க வேண்டும்.! ஒன்று கூடும் அதிமுகவினர்.!

திடீர் மாற்றம்.. சசிகலா தலைமையேற்க வேண்டும்.! ஒன்று கூடும் அதிமுகவினர்.!


admk members support to sasikala

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. அந்த பிளவுதான் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பின்னடைவை சந்தித்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்விக்குப்பிறகு அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏனென்றால் நகர்ப்புறத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றவர்களும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.எனவே அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றை தலைமை குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 

இந்தநிலையில், நேற்று தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையது கான் தலைமையிலான தேனி அ.தி.மு.க.வினர் சசிகலா, தினகரன் ஆகியோரை  மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்தார். அதேபோல் சசிகலா அ.தி.மு.க.வின் தலைமையேற்க வேண்டும், டி.டி.வி. தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கோவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.