"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
கருணாநிதியை சந்தித்த நடிகர் விஜய்!. வெளியாகும் புகைப்படம்!.
காவேரி மருத்துவமனையில் உடல்நிலை கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரபல திரைப்பட நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அவரின் உடலநிலை குறித்து அறிவதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான விஜய் கலைஞர் கருணாநிதியை சந்திப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருக்கும் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் அருகில் அமர்ந்திருந்தார்.
அது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தினை திமுகவினர் சமூகவலைத்ததில் பகிர்ந்து வருகின்றனர். இதற்குமுன்னதாக நடிகர் ரஜினி அவரை பார்த்துவந்ததையும் வெளியிட்டனர்.