கல்வி சூதாட்டமாக மாறக்கூடாது - அதிகாலையே அறிக்கை மூலம் பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

கல்வி சூதாட்டமாக மாறக்கூடாது - அதிகாலையே அறிக்கை மூலம் பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!


Actor surya reply on education

கடந்த வாரம் நடந்த அகரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சூர்யா தற்போதைய கல்வி முறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் மாணவர்கள் படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.

அவருடைய கருத்திற்கு மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்பு அலைகள் வீசத் துவங்கின. அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூரியாவுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.  ஆனால் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக பேசினர். 

actor surya

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று காலை புதிய அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அ
தன்னை குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு தகுந்த எடுத்துக்காட்டுடன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், கல்வி என்பது ஒரு சமூக அறம். 'பணம் இருந்தால் விளையாடு' என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. 

நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என்று கூறியுள்ளார். பெற்றோரை இழந்த மாணவி மருத்துவம் முடித்து ராணுவத்தில் பணியாற்றுகிறார். கல் உடைக்கிற தொழிலாளியின் மகன், சென்னை மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்.

actor surya

நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர்கள் ஆகியிருக்க முடியாது அரசுப்பள்ளிகளில் படித்து மருத்துவர்களான மாணவர்கள் தரத்தில், தகுதியில் சிறந்தே விளங்குகின்றனர். நீட் அறிமுகமான பிறகு அகரம் மூலமாக அரசுப்பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை.

கல்வியைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று எதிர்க்கருத்துகள் வந்தபோது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறை கொண்டு என் கருத்துக்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று சூரியா தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.