தமிழகம் சினிமா

யாருக்குமே தெரியாமல் கஜா பாதிப்பிற்கு நிதி வழங்கிய தல அஜித்! எத்தனை லட்சம் தெரியுமா?

Summary:

Actor ajith donates twenty five lakhs for kaja cyclone

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் உருக்குலைந்து கிடக்கிறது டெல்டா மாவட்டங்கள். இத்தனை ஆண்டுகளாக வளர்த்த மரங்களை இழந்து, வீடுகளை இழந்து, மின்சாரமின்றி, குடிக்க நீர் இல்லாமல் சோகத்தில் உள்ளனர் மக்கள்.

சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்து வருகின்றனர். அரசாங்கமும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மின்சாரம் வந்துவிட்டாலும் இன்னும் பல இடங்களில் இயல்புநிலை திரும்பவில்லை.

இந்நிலையில் சினிமா உலகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் கஜா புயலுக்காக நிதி உதவி செய்துள்ளார். நடிகர் சூரியா குடும்பம், விஜய், விஜய் சேதுபதி, ரஜினி, கமல், கேப்டன் விஜயகாந்த் என பலரும் தங்களால் முடிந்தவரை பல உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்துள்ளார்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் நேரடியாக அரசாங்கத்திடம் இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் நிதி கொடுத்துள்ளார் நடிகர் அஜித். அது சம்மந்தமான செய்தி ஓன்று வெளியாகியுள்ளது.

Ajithfund


Advertisement