பேருந்தின் குறுக்கே விழுந்து பெண்கள் பலி! சென்னையில் நடந்த கோர விபத்தின் வீடியோ காட்சிAccident video in chennai

பேருந்தின் குறுக்கே விழுந்து பெண்கள் பலி! சென்னையில் நடந்த கோர விபத்தின் வீடியோ காட்சி 

இன்று காலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே சாலையில் நடந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் பலியாகினர். 

இன்று காலை சென்னை நந்தனம் சாலையில் 20 வயதான நிஷான் கொல சிவா என்ற இளைஞருடன் பவானி, நாகலட்சுமி என்ற இரண்டு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதில் சிவா மட்டும் ஹெல்மெட் அணிந்திருந்தார். இரண்டு பெண்களும் ஹெல்மெட் அணியவில்லை. 

சாலையின் வலதுபுறத்தில் ஒரு அரசு பேருந்தும் இடதுபுறத்தில் வேறு ஒருவர் பைக்கிலும் வந்துள்ளார். இருவருக்கும் இடையே புகுந்து வேகமாக செல்ல முயன்ற சிவாவின் பைக் இடதுபுறம் சென்ற பைக்கின் மீது உரசியது. இதனால் நிலைகுலைந்த சிவாவின் பைக் வலதுபுறம் சாயந்தது. 

அதே சமயத்தில் வலதுபுறம் வேகமாக வந்த அரசு பேருந்தின் குறுக்கே மூவரும் விழுந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சிவா மட்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த கோர விபத்தானது சாலை ஓரத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.