சாலையில் சென்றவர்கள் மீது தாறுமாறாக மோதிய கார்.! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி.!

சாலையில் சென்றவர்கள் மீது தாறுமாறாக மோதிய கார்.! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி.!


accident in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள காலிங்கராயன்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவரும், வீரக்குடியை சேர்ந்த குமார் என்பவரும் இருச்சக்கரவாகனத்தில் முக்காணிப்பட்டி விலக்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. 

அந்த கார் முக்காணிப்பட்டி விலக்கு ரோடு அருகே வந்தபோது நிலை தடுமாறி இருச்சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அந்த கார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தங்கராஜ் என்பவர் மீதும் மோதியுள்ளது.

accidentஇதில், பலத்த காயமடைந்த தங்கராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.