தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து! உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி! அதிர்ச்சி சம்பவம்!

கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
சென்னையில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை வடமாநிலத்தில் முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னையில் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நேற்று இரவு நடைபெற்று வந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சற்று முன் கிடைத்த தகவலின்படி உதவி இயக்குனர் கிருஷ்ணா,மது மற்றும் சந்திரன் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். இயக்குனர் ஷங்கர்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த உடன் கமல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.