BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நீதிமன்றத்தில் அபிராமியும், சுந்தரமும் நேருக்கு நேர் சந்திப்பு!. இருவரின் கொடூர ரியாக்ஸன்!.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது.

இதனையடுத்து போலீஸார் அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக இருவரையும் ஒரே வாகனத்தில் அழைத்து வந்த போலீசார், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர், இருவரின் நீதிமன்ற காவலையும் 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து இருவரும் ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர், வேனில் ஏறிய போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது அபிராமி சுந்தரத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுததாகவும், சுந்தரம் கோபத்துடன் காணப்பட்டதாகவும் கூறுகின்றனர்.