அரசியல் தமிழகம் சினிமா

இனி சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்!! உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய பிக்பாஸ் பிரபலம்!! யார்னு பார்த்தீங்களா!!

Summary:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது இதன் வாக்கு எண்ணிக்கை மே 2 மிக

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது இதன் வாக்கு எண்ணிக்கை மே 2 மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக தலைவரான ஸ்டாலின் இன்று முதல்வராக பதவி ஏற்றார்.

இதற்கிடையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். மேலும் தனது அட்டகாசமான பிரச்சாரத்தால் அதிக அளவில் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியும் பெற்றார். முதல் முதலாக போட்டியிட்ட நிலையில் அமோக வெற்றி பெற்ற அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான ஆரி அர்ஜுன் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர், மாபெரும் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சூரியன் இனி மிகவும் பிரகாசமாக ஒளிரட்டும் என பதிவிட்டுள்ளார்.


Advertisement