பெண்ணின் தலையில் வண்டு கடித்து, பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்...!!

பெண்ணின் தலையில் வண்டு கடித்து, பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்...!!


a-woman-was-bitten-on-the-head-by-a-beetle-a-tragically

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே தோட்ட வேலை செய்ய சென்ற பெண் கதம்ப வண்டு கடித்து உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். கூடலூர் லோயர் கேம்ப் வெட்டுக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு தினசரி கூலிக்கு வேலையாட்கள் செல்வது வழக்கம்.

லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த 45 வயதாகும் நல்லம்மாள்  கூடலூர் லோயர் கேம்ப் அருகே உள்ள வைரவன் அணை அருகே இருக்கும் தனியார் தோட்ட வேலைக்கு தினசரி கூலி ஆளாக வேலைக்கு 
செல்வது வழக்கம்.

வழக்கம் போல் காலையில் நல்லம்மாள் வைரவன் அணை அருகே உள்ள தோட்ட வேலைக்கு  சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த கதம்ப வண்டு எதிர்பாராத விதமாக நல்லம்மாள் தலையில் பல முறை கொட்டி உள்ளது. 

வலியினால் துடித்த நல்லம்மாளை அருகில் இருந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தலைப்பகுதியில் வண்டு கொட்டியதால் விஷம் அதிகளவில் ஏறியதால் கூறப்படுகிறது. 

இதனால் நல்லம்மாள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தும், விஷம் உடல் முழுவதும் பரவியதால் நல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கதம்ப வண்டு என்பது தேனீக்கள் போன்று இருக்கக்கூடிய வண்டு வகையைச் சார்ந்தது. இது மனித நடமாட்டம் இல்லாத உயரமான மலைப்பகுதிகளிலும் பாறை இடுக்குகளிலும் காணப்படும். 

அதிக விஷத்தன்மை கொண்ட இந்த வண்டு ஒருவரை கடிக்கும் பொழுது உயிரிழப்பு ஏற்படுவதுண்டு.  கை கால்களில் கொட்டும் பொழுது உடலில் கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கை கால்களில் கொட்டினால் அவர்களை காப்பாற்றி விடலாம் . ஆனால் தலைப்பகுதியில் கொட்டினால் காப்பாற்றுவது கடினம் என்று கூறினர்.