கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
சரக்கு வாகனம் மீது மோதிய இரு சக்கர வாகனம்.. இளைஞர் பலி.. கதறும் பெற்றோர்.!

திருப்பாலைக்குடி அருகிலுள்ள பழங்கோட்டை கிராமத்தில் ரமேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ரமேஷ் தேவிப்பட்டினம் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தேவிப்பட்டினம் நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் ரமேஷ் சென்று கொண்டிருந்தார். பத்தனேந்தல் பகுதி அருகில் ரமேஷ் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய அவரது இரு சக்கர வாகனம் எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த திருப்பாலைக்குடி காவல் துறையினர் ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான சரக்கு வாகன ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.