இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து.. நிகழ்விடத்திலேயே பலியான சம்பவம்..!

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து.. நிகழ்விடத்திலேயே பலியான சம்பவம்..!


A tipper lorry hit a youth on a two-wheeler.. The incident killed him on the spot..

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அடுத்த கட்டணஞ்செவல் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது நிரம்பிய கோடீஸ்வரன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு மடத்துப்பட்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த தாயில்பட்டி நோக்கி சென்ற டிப்பர் லாரியானது கோடீஸ்வரன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி உள்ளது. இதில் பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்டு கோடீஸ்வரன் நிகழ்விடத்திலேயே பலியானார்.

accident

இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான கோடீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.