இளம் பெண்ணின் ஃபோட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து... பேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் வெளியிட்ட வாலிபர் கைது..!

இளம் பெண்ணின் ஃபோட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து... பேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் வெளியிட்ட வாலிபர் கைது..!


A teenager who morphed a photo of a young woman into an obscenity and published it on Facebook with a fake ID was arrested..

வாலிபர் ஒருவர் இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டதால்‌ கைது செய்யப்பட்டுள்ளார். 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் தனது தந்தையுடன் நெல்லை மாநகர காவல் ஆணையகரத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.  அந்தப்பெண்ணின்  போட்டோவை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பேக் ஐடி  ஒன்று உருவாக்கி இருக்கிறார்கள்.

மேலும் அந்த பெண்ணின் ஒரிஜினல் பேஸ்புக் ஐடியில் இருக்கும் நண்பர்களுக்கு, பேக் ஐடியில் இருந்து ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர். நண்பர்கள் மூலம் இதுபற்றி  அந்தப் பெண்ணுக்கு தெரிந்துள்ளது. 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையில் இருந்து பேக் ஐடி உருவாக்கப்பட்டு மெசேஜ் அனுப்பியது தெரியவந்தது. இளம் பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக பேக் ஐடி உருவாக்கியது சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஹாப்ரோ குமார் (27) என்பவர் என்று கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்தனர். மேலும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.