தமிழகம்

ஆடு மேய்க்க சென்ற பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Summary:

ஆடு மேய்க்க சென்ற பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்ற வாலிபர் கடந்த 2019-ம் ஆண்டு வயல் பகுதியில் ஆடு மேய்க்க சென்ற 45 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து, அந்தப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேந்தரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி  நேற்று தீர்ப்பு வழங்கினார்.

பெண்ணை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சுரேந்தருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து சுரேந்தரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Advertisement