பாடம் எடுக்கும் ஆசிரியை.. பீஸ்ட் ஸ்டெப் போடும் மாணவன்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

பாடம் எடுக்கும் ஆசிரியை.. பீஸ்ட் ஸ்டெப் போடும் மாணவன்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!



a Student Dance infront of Teacher in Class Room

ஆசிரியருக்கு மாணாக்கர்கள் பயந்து நல்வழிப்பட்ட காலம் மலையேறி, ஒவ்வொரு நாளும் ஆசிரியரை மாணவர்கள் கிண்டல் செய்வது, வகுப்பறையில் ஆசிரியர் முன்னிலையில் அவமதிப்பு செய்வது என பல துயரங்கள் நடந்து வருகிறது. இந்தியாவின் எதிர்கால தூண்கள் திரைமோகத்தில் மதியிழந்து செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது.

இந்நிலையில், எந்த தமிழக அரசு பள்ளியில் எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லாத வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில் மாணவர் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போதே, கடைசி இருக்கையில் ஆடுகிறார். இவர் விஜயின் பீஸ்ட் பட பாடலுக்கு ஆடுவதாக தெரிகிறது.

அவருடன் சேர்ந்து சில மாணவர்களும் ஆடும் மாணவரை உற்சாகப்படுத்த, அதனை கண்டுகொள்ளாத ஆசிரியை நாம் கற்பிக்க ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு கற்பிப்போம் என்பதை போல பாடம் எடுத்து வருகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது.